Monday, November 4, 2013

tuticorin parota and macron

Tuticorin parotta and macroon

Thoothukudi Parrota (settu)
தூத்துக்குடி புரோட்டா (செட்டு)

சுவையான செய்திகள்
செட்டு என்று செல்லமாக அழைக்கப்படும் பரோட்டாவின் சுவைக்கு
மயங்காதவர்கள் ஒருவரும் இருக்க முடியாது ! இங்கு
பரோட்டாவை, புரோட்டா அல்லது செட்டு என்றேதான்
சொல்கிறார்கள் !
எண்ணெயில் பொரித்தெடுத்த புரோட்டாக்களை
மணக்க, மணக்க மட்டன் அல்லது கோழி குருமாவோடு
கலந்து வாழை இலையில் ஆவி பறக்க மடித்துக் கொடுக்கும்
ரசனையே தனி ! அதன் சுவையோ
அப்பப்பா....! வெளியூரில் தங்கியிருக்கும்
தூத்துக்குடி வாசிகள் ஊருப்பக்கம் வந்தால்
ரயிலை நிறுத்தியாவது புரோட்டா சாப்பிடாமல்
செல்ல மாட்டார்கள் !
அம்புட்டு ருசி

நீங்களும் தூத்துக்குடிக்கு வந்தா
மறக்காம செட்டு சாப்பிடுங்க !



Thoothukudi Macroon

மக்ரோன்
"தூத்துக்குடிக்கு போகிறேன்னு" யாராவது
சொன்னால் உடனே தெரிந்தவர்கள்,
தெரியாதவர்கள் என அனைவரும் சொல்லிவிடுவது
"வரும்போது மக்ரோன் வாங்கிட்டு வாங்கன்னு"
அந்தளவுக்கு தூத்துக்குடி மக்ரோன் famous !
தமிழ் நாட்டில் மட்டுமல்ல, வெளி நாடுகளிலும்,
தூத்துக்குடி மக்ரோனுக்கு தனி மவுசுதான் !
முந்திரி, சர்க்கரையை பிராதான பொருளாக கொண்டு
தயாரிக்கப்படும் மக்ரோனை, வாயில் போட்டதுமே
கரையும் ருசியே ருசிதான் !
யாராவது தூத்துக்குடிக்கு போனா
நீங்களும் சொல்லிவிடுங்கள் !

No comments:

Post a Comment